ADDED : ஆக 31, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நங்கவள்ளி: நங்கவள்ளி பெரிய மாரியம்மன் கோவில் அருகே பெரிய விநாயகர் ஆலயம் உள்ளது. அதன் கும்பாபிேஷக விழா, கடந்த, 19ல் தொடங்கியது. நேற்று முன்தினம் அங்குள்ள தெப்ப குளத்தில் தொடங்கிய தீர்த்தக்குட ஊர்வலம், கோவிலை அடைந்தது.
தொடர்ந்து நேற்று காலை, 9:30 மணிக்கு கும்பாபிேஷகம் நடந்-தது. தொடர்ந்து கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்-பட்டது. இதையொட்டி மூலவர் பெரிய விநாயகர், ராகு, கேது பக-வானுக்கு சிறப்பு அலங்காரம், மகா
தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.