நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, கெங்கவல்லி சுவேத நதியோரம், பெரியாயி அம்மன் கோவில் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு, பூசாரி பெரியசாமி, பூட்டிச்சென்றார். நேற்று காலை, 6:00 மணிக்கு, அவர் கோவிலை திறந்தபோது, உண்டியல் திருடுபோனது தெரிந்தது.
பின் கோவில் நிர்வாகி சந்திரன் புகார்படி, கெங்கவல்லி போலீசார் ஆய்வு செய்தபோது, முட்புதரில் உடைக்கப்பட்ட நிலையில் உண்டியல் கிடந்தது. அதில் இருந்த பணத்தை காணவில்லை. கோவில், 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, மதில் சுவர் வழியே ஒருவர் ஏறி வந்து, உண்டியல் திருடிச்சென்றது பதிவாகி இருந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.