/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
10 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்மாவட்ட ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
/
10 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்மாவட்ட ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
10 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்மாவட்ட ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
10 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்மாவட்ட ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 15, 2025 01:37 AM
10 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்மாவட்ட ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
சேலம்சேலம், கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளே, மாவட்ட ஜாக்டோ - ஜியோ சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் அர்த்தனாரி தலைமை வகித்தார்.
அதில் முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; கால வரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும்; அரசின் பல்வேறு துறைகளில், 30 சதவீதத்துக்கு மேலாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தினர். தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க மாநில பொருளாளர் திருநாவுக்கரசு, பொது சுகாதார துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் ஆத்துார் தாலுகா அலுவலகம் முன், ஜாக்டோ ஜியோ சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். அதில் சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்தல் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தினர்.மேலும் ஓமலுார் தாலுகா அலுவலகம் முன், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.