/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணையில் 13 டி.எம்.சி., சரிவு
/
மேட்டூர் அணையில் 13 டி.எம்.சி., சரிவு
ADDED : ஏப் 23, 2024 10:15 PM
மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால் கடந்த ஆண்டு டிச., 29ல் அணைக்கு, 901 கனஅடி நீர் வந்தது. கரையோர மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கு அணையில் இருந்து வினாடிக்கு, 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
அன்று நீர்மட்டம், 71.18 அடி, நீர்இருப்பு, 33.72 டி.எம்.சி.,யாக இருந்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடித்த வறட்சியால், இரு நாட்களாக அணைக்கு வினாடிக்கு, 57 கன அடி நீர் வந்தது. குடிநீருக்கு வினாடிக்கு, 1,200 கனஅடி நீர் திறக்கப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக இருந்ததால் நேற்று அணை நீர்மட்டம், 54.66 அடி, நீர் இருப்பு, 20.87 டி.எம்.சி.,யாக சரிந்தது.
இதனால், 115 நாட்களுக்கு பின் அணை நீர்மட்டம், 17 அடி, நீர்இருப்பு, 13 டி.எம்.சி., சரிந்துள்ளது.

