/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
6 நாட்களில் பவுன் விலை ரூ.1,600 உயர்வு
/
6 நாட்களில் பவுன் விலை ரூ.1,600 உயர்வு
ADDED : ஆக 18, 2024 04:26 AM
சேலம்: சேலத்தில் கடந்த, 6 நாட்களில் பவுன் விலை, 1,600 ரூபாய் உயர்ந்துள்ளது.
சர்வதேச மார்க்கெட் நிலவரப்பட்டி தங்கம் விலை ஏற்ற, இறக்க-மாக காணப்படும். சேலத்தில் சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த, 12ல் கிராம், 6,470, பவுன், 51,760 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் கிராம், 6,565, பவுன், 52,520 ரூபாயாக உயர்ந்தது. நேற்று கிராமுக்கு, 105 உயர்ந்து, 6,670 ரூபாய், பவுனுக்கு, 840 உயர்ந்து, 53,360 ரூபாய்க்கு விற்ப-னையானது. கடந்த, 6 நாட்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு, 200, பவுனுக்கு, 1,600 ரூபாய் உயர்ந்துள்ளது.
அதேபோல் கடந்த, 12ல் வெள்ளி கிராம், 87, பார் வெள்ளி, 87,000 ரூபாய்; நேற்று முன்தினம் கிராம், 88, பார் வெள்ளி, 88,000 ரூபாய்; நேற்று கிராமுக்கு, 2 உயர்ந்து, 90, பார் வெள்ளி, 2,000 உயர்ந்து, 90,000 ரூபாய்க்கு விற்பனையானது. 6 நாட்-களில் பார் வெள்ளி, 3,000 ரூபாய் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சேலம் மாநகர் வெள்ளி, தங்க, வைரம் சங்க தலைவர் ஆனந்தன் கூறியதாவது:
அமெரிக்கா பணவீக்கம் குறைய தொடங்கி உள்ளது. இதனால் செப்டம்பரில், அங்கு மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்க அதிக வாய்ப்புள்ளது. வட்டி விகிதம் அதிகம் இருந்தால் தங்கம் மீதான முதலீடு வாய்ப்பு குறைவாக இருக்கும்.
ஆனால், வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதால், தங்கம் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஆடி மாதத்துக்கு பின் தங்கம் தேவை அதிகரிக்கும். மேலும் சர்வதேச அளவில் பொருளாதார நிலை, புவிசார் அரசியல், போர் மோதல்களால் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.