ADDED : செப் 05, 2024 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி: இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன், 27. இவர் சங்ககிரியில் உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்து, கல்பாரப்பட்டியில் தனியே வீடு எடுத்து வசிக்கிறார்.
நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 மணிக்கு இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த, 'பல்சர்' பைக்கை, 2 பேர் திருட முயன்றனர். சத்தம் கேட்டு வெளியே வந்த மணிவண்ணன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், 2 பேரையும் பிடித்து, ஆட்டையாம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் ராசிபுரம் அருகே வெண்ணந்துாரை சேர்ந்த குணா, 30, குமார், 24, என தெரிந்தது. தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.