/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிலோ 20 ரூபாயாக சின்ன வெங்காயம் சரிவுமூட்டை மூட்டையாக வாங்கி சென்ற மக்கள்

ADDED : மார் 21, 2025 01:42 AM
கிலோ 20 ரூபாயாக சின்ன வெங்காயம் சரிவுமூட்டை மூட்டையாக வாங்கி சென்ற மக்கள்
புன்செய்புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதி மற்றும் தாளவாடி மலைப்பகுதி கிராமங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்
படுகிறது. சில மாதங்களுக்கு முன் சாகுபடி பாதித்ததால் ஒரு கிலோ, 120 ரூபாயை கடந்து விற்றது. தொடர்ந்து விலை படிப்படியாக குறைந்தது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ, 60 ரூபாய்க்கு விற்ற நிலையில் கடந்த வாரம், 40 ரூபாயாக குறைந்தது. இந்நிலையில் புளியம்பட்டி வாரச்சந்தைக்கு, 600க்கும் மேற்பட்ட சின்ன வெங்காய மூட்டை நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வழக்கமாக, 400 மூட்டைதான் வரும். இதனால் விலை சரிந்து கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் மக்கள் சின்ன வெங்காயத்தை போட்டி போட்டு மூட்டை மூட்டையாக வாங்கி சென்றனர். அதேபோல் நடவுக்கு பயன்படும் விதை வெங்காயமும், 40 ரூபாயில் இருந்து, 25 ரூபாயாக விலை குறைந்ததால் விவசாயிகள் அதிகம் வாங்கி சென்றனர்.