ADDED : ஜன 19, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,: பிற கட்சிகளில் இருந்து விலகியோர், தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி, சேலம் தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது. மத்திய மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில், நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற பொறுப்பாளராக இருந்த பாலசுப்ரமணியன், தே.மு.தி.க., மாவட்ட பிரதிநிதியாக இருந்த ரமேஷ்குமார் உள்பட, அந்த இரு கட்சிகளில் இருந்து விலகிய, 200க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் இணைந்தனர்.

