/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை 25ம் ஆண்டு விழா
/
விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை 25ம் ஆண்டு விழா
விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை 25ம் ஆண்டு விழா
விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை 25ம் ஆண்டு விழா
ADDED : மார் 07, 2025 07:35 AM
சேலம் : சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், 2001ல் பல்கலை அந்தஸ்தை பெற்றது. இப்பல்கலை கடந்த, 1ல், 25ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதனால் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன அறக்கட்டளை அறங்காவலர் அன்னபூரணி அறிவுறுத்தல்படி கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
அதை ஒட்டி பல்கலையின் சென்னை வளாகத்தில் நடந்த, வருடாந்திர தலைமைத்துவ கூட்டத்தில் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை வேந்தர் சரவணன், துணைத்தலைவர்கள் சதீஷ்குமார், சந்திரசேகர், டாக்டர் அனுராதா, இயக்குனர்கள் காமாட்சி, சுமதி, அருணாதேவி, ஜெகநாதன், ராமசாமி ஆகியோர், வெள்ளி விழா கொண்டாட்டங்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பல்கலை துணைவேந்தர் சுதிர், இணை துணைவேந்தர் சபரிநாதன், பதிவாளர் நாகப்பன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சுரேஷ், சாமுவேல், பேராசிரியர்கள் தேவராஜன், சிவசிதம்பரம், இயக்குனர்கள், அனைத்து உறுப்பு கல்லுாரிகளின் டீன்கள், முதல்வர்கள் பங்கேற்றனர். மேலும் கொண்டாட்டத்தை ஒட்டி மாநாடுகள், வினாடி - வினா, ஹேக்கத்தான், கலாசார நிகழ்ச்சி, விளையாட்டு, சமூக நல நடவடிக்கைகள் ஆகியவை கடந்த, 1ல் தொடங்கி, 2026 பிப்ரவரி, 28 வரை நடக்கும் என, துணைவேந்தர் சுதிர் கூறினார்.