/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3வது ஊதிய மாற்றம் அமல்படுத்த பி.எஸ்.என்.எல்., வலியுறுத்தல்
/
3வது ஊதிய மாற்றம் அமல்படுத்த பி.எஸ்.என்.எல்., வலியுறுத்தல்
3வது ஊதிய மாற்றம் அமல்படுத்த பி.எஸ்.என்.எல்., வலியுறுத்தல்
3வது ஊதிய மாற்றம் அமல்படுத்த பி.எஸ்.என்.எல்., வலியுறுத்தல்
ADDED : பிப் 06, 2025 01:22 AM
3வது ஊதிய மாற்றம் அமல்படுத்த பி.எஸ்.என்.எல்., வலியுறுத்தல்
சேலம்: சேலம் மாவட்ட பி.எஸ்.என்.எல்., எம்ப்ளாயீஸ் யுனியன், 11வது மாவட்ட மாநாடு, செவ்வாய்ப்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஹரிஹரன் தலைமை வகித்தார்.
அகில இந்திய உதவி பொது செயலர் செல்லப்பா பேசுகையில், ''பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, 4ஜி, 5ஜி சேவை அனுமதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். 3வது ஊதிய மாற்றம், 10 ஆண்டாக நிலுவையில் உள்ளதால் நாடு முழுதும் ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காலம் கடத்தாமல் ஊதிய மாற்றத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து மாவட்ட தலைவராக சீனிவாசன், செயலராக ஹரிஹரன், பொருளாளராக ரமேஷ் உள்பட, 13 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக, பி.எஸ்.என்.எல்., உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு புனரமைப்பு மாநாடு நடந்தது. மாநிலக்குழு உறுப்பினர் கவிதா தலைமை வகிக்க, அகில இந்திய கமிட்டி உறுப்பினர் உமாராணி பேசினார். இதில் மாவட்ட கன்வீனராக லாவண்யா, இணை கன்வீனர் கீதா உள்பட, 11 பேர் அடங்கிய மாவட்ட குழுவினர் தேர்வு
செய்யப்பட்டனர்.