/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.34.70 லட்சத்துக்கு கடைகள் வாடகை ஏலம்
/
ரூ.34.70 லட்சத்துக்கு கடைகள் வாடகை ஏலம்
ADDED : மார் 06, 2025 01:52 AM
ரூ.34.70 லட்சத்துக்கு கடைகள் வாடகை ஏலம்
வீரபாண்டி:ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் எதிரே டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான பழமையான வணிக வளாகம் இடிக்கப்பட்டு, அதே இடத்தில், 2.33 கோடி ரூபாய் மதிப்பில், 12 கடைகளுடன் புதிதாக கட்டி திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இதனால், கடைகளின் மாத வாடகை ஏலம், கடந்த பிப்., 17ல் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில்
நடந்தது. ஒரு கடை மட்டும் ஏலம்போனது. மீதி கடைகளுக்கு யாரும் ஏலம் கோராததால் தள்ளி வைக்கப்பட்டு நேற்று நடந்தது. செயல் அலுவலர் மேகநாதன்(பொ) தலைமையில், தலைவர் முருகபிரகாஷ் முன்னிலையில் நடந்த ஏலத்தில், 12 கடைகளின் ஓராண்டு வாடகையாக, 34.70 லட்சம், அதற்கான ஜி.எஸ்.டி., 5.29 லட்சம் என, 40.32 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.