ADDED : செப் 14, 2024 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே சாமிநாயக்கன்பட்டியில், , உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இரு இடங்களில் மினி லாரிகளில் ரேஷன் அரிசியை, கர்நாடகாவுக்கு கடத்தவிருந்தது தெரிந்தது.
அங்கிருந்த ஜாகீர்ரெட்டிப்பட்டி ராமஜெயம், 52, சூரமங்கலம் சந்தோஷ், 30, உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து, 6.5 டன் ரேஷன் அரிசி, மூன்று மினி லாரிகள், இரு 'டியோ' மொபட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பூசாரிப்பட்டியை சேர்ந்த சரவணன், கர்நாடக மாநிலம் பங்காருப்பேட்டை முத்து ஆகியோரை தேடுவதாக, போலீசார் தெரிவித்தனர்.