/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., 69 இடங்களில் ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., 69 இடங்களில் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 30, 2025 01:24 AM
தி.மு.க., 69 இடங்களில் ஆர்ப்பாட்டம்
சேலம்:தமிழகத்தில், 100 நாள் வேலை திட்டத்துக்கான, 4,034 கோடி ரூபாய் நிதியை, 4 மாதங்களுக்கு மேலாக விடுவிப்பு செய்யாத மத்திய அரசை கண்டித்து, தி.மு.க., சார்பில் தமிழகம் முழுதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம் மத்திய மாவட்டத்தில், வடக்கு ஒன்றியம் சார்பில் சர்க்கார் கொல்லப்பட்டி ஊராட்சி அலுவலகம் முன், மாவட்ட அவைத்தலைவர் சுபாசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலர் நடராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். இத்துடன் மத்திய மாவட்டத்தில், 14 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சேலம், அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சி அலுவலகம் முன், கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இத்துடன் கிழக்கு மாவட்டத்தில், 40 இடங்களில், மேற்கு மாவட்டத்தில், 15 இடங்களில், தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.