/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் 7 கிலோ வெள்ளி கொலுசு கொக்கி பறிமுதல்
/
சேலத்தில் 7 கிலோ வெள்ளி கொலுசு கொக்கி பறிமுதல்
ADDED : ஏப் 02, 2024 04:15 AM
சேலம்: சேலம், தெற்கு தொகுதி நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் மீனாட்சிசுந்தரம் தலைமையிலான குழுவினர், நேற்று மாலை, 6:00 மணியளவில் செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோவில் தெரு - நெத்திமேடு பிரதான சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆக்டிவா பைக்கை மறித்து சோதனையிட்டனர். அப்போது பெரிய பாலிதீன் கவரில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்ட, வெள்ளி கொலுசு கொக்கிகள் இருந்தது.
விசாரணையில், சங்ககிரி தாலுகா, கொசவம்பட்டி, கணபதி நகரை சேர்ந்த குமார், 45, என்பதும், பிடிபட்ட வெள்ளி 7 கிலோ 20 கிராம் எடையளவு கொண்டது, அதன் மதிப்பு, 5 லட்சத்து, 71 ஆயிரத்து, 200 ரூபாய் என தெரியவந்தது. அதற்கான ஆவணம், ரசீது எதுவும் அவரிடம் இல்லை. எனவே மொத்தமாக பறிமுதல் செய்து, சேலம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

