/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
7ல் கருணாநிதி நினைவு நாள் எம்.பி., - எம்.எல்.ஏ., அழைப்பு
/
7ல் கருணாநிதி நினைவு நாள் எம்.பி., - எம்.எல்.ஏ., அழைப்பு
7ல் கருணாநிதி நினைவு நாள் எம்.பி., - எம்.எல்.ஏ., அழைப்பு
7ல் கருணாநிதி நினைவு நாள் எம்.பி., - எம்.எல்.ஏ., அழைப்பு
ADDED : ஆக 04, 2024 01:18 AM
சேலம், தி.மு.க.,வின் சேலம் எம்.பி., செல்வகணபதி அறிக்கை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி, 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, வரும், 7ல் அவரது படத்துக்கு மாலை அணிவித்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். காலை, 7:00 மணிக்கு தாரமங்கலம் நகர தி.மு.க., அலுவலகத்தில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு கருணாநிதி சிலைக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் எம்.பி., - எம்.எல்.ஏ..,க்கள், ஒன்றிய, நகர, பேரூர், வார்டு கிளை செயலர்கள், நிர்வாகிகள், நகராட்சி, டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட சார்பு அணியினர் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன் அறிக்கை:
கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு, 7 காலை, 8:00 மணிக்கு, சேலம் பெரியார் சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு, பெரியார் மேம்பாலம் வழியே சென்று அண்ணா பூங்கா அருகே உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படும். இதனால் சேலம் மத்திய மாவட்டம், மாநகரின் அனைத்து வார்டுகள், தெருக்களில், கருணாநிதி படத்தை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும். இதில் அனைத்து நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.