/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுவாமிகள் 89ம் ஆண்டு ஆராதனை விழாபஞ்சரத்ன கீர்த்தனை பாடிய கலைஞர்கள்
/
சுவாமிகள் 89ம் ஆண்டு ஆராதனை விழாபஞ்சரத்ன கீர்த்தனை பாடிய கலைஞர்கள்
சுவாமிகள் 89ம் ஆண்டு ஆராதனை விழாபஞ்சரத்ன கீர்த்தனை பாடிய கலைஞர்கள்
சுவாமிகள் 89ம் ஆண்டு ஆராதனை விழாபஞ்சரத்ன கீர்த்தனை பாடிய கலைஞர்கள்
ADDED : மார் 20, 2025 01:21 AM
சுவாமிகள் 89ம் ஆண்டு ஆராதனை விழாபஞ்சரத்ன கீர்த்தனை பாடிய கலைஞர்கள்
சேலம்:சேலம் தியாகராஜர், வேங்கடரமண பாகவதர் சுவாமிகள் மகோத்சவ சபை சார்பில், பட்டைக்கோவில் அருகே சிங்கமெத்தை சவுராஷ்டிரா திருமண மண்டபத்தில், தியாகராஜர், வேங்கடரமண பாகவத சுவாமிகளின், 89ம் ஆண்டு ஆராதனை விழா நடக்கிறது.
அதில் நேற்று காலை, தியாகராஜர், வேங்கடரமண பாகவதர் சுவாமிகளின் படங்களுக்கு பூஜை நடந்தது.தொடர்ந்து சேலம் அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கரராமன் தலைமையில் வாய்ப்பாட்டு, இசைக்கலைஞர்கள், தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி, இசைக்கருவிகளால் இசைத்து, சுவாமிக்கு மரியாதை செய்தனர். இதை ஒட்டி தினமும் மாலை, 6:00 மணிக்கு கச்சேரி நடக்கிறது. முதல் நாளான நேற்று புவனகிரி விஷ்ணுபிரியா சுதர்சனின் வாய்ப்பாட்டு கச்சேரி நடந்தது.
இன்று மாலை, சேலம் ஸ்வேதாவின் கச்சேரி, ரஞ்சனி ராம்குமார், ஸ்ருதிலயா மணிகண்டனின் தமிழ் இசை, திருப்புகழ் இசை நிகழ்ச்சி நடக்கிறது வரும், 24ல் அன்னதானத்துடன் ஆராதனை விழா நிறைவு பெறும்.