/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காடு மலையில் அந்தரத்தில் தொங்கிய பஸ்; தப்பிய பயணியர்
/
ஏற்காடு மலையில் அந்தரத்தில் தொங்கிய பஸ்; தப்பிய பயணியர்
ஏற்காடு மலையில் அந்தரத்தில் தொங்கிய பஸ்; தப்பிய பயணியர்
ஏற்காடு மலையில் அந்தரத்தில் தொங்கிய பஸ்; தப்பிய பயணியர்
ADDED : செப் 10, 2024 07:30 AM

ஏற்காடு : சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து ஆம்னி பஸ்சில், 40 பேர் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு நேற்று முன்தினம் காலை வந்தனர்.
காரைக்கால், செல்லுாரை சேர்ந்த முருகவேல், 51, பஸ்சை ஓட்டினார். ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு, நேற்று மதியம் 2:00 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டனர்.
மலைப்பாதையில் உள்ள, 14வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பு சுவரை உடைத்த பஸ், அந்தரத்தில் நின்றது. பயணியர் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே வந்தனர். தடுப்பு சுவரை உடைத்த பஸ், சுவரில் இருந்த பெரிய கருங்கல்லில் சிக்கியதால், 40 அடி பள்ளத்தில் சிக்கி, அப்படியே நின்றது.
இதனால், பள்ளத்தில் பஸ் கவிழ்வது தவிர்க்கப்பட்டது.
சில பயணியருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஓட்டுனர் முருகவேலுக்கு காயம் ஏற்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.