/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிற்ப தொழிலாளிகளுக்கு நிலம் வழங்க எதிர்ப்பு சாலை மறியலுக்கு முயன்ற 30 பேர் மீது வழக்கு

ADDED : ஆக 09, 2024 02:17 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மரச்சிற்ப தொழில் செய்கின்றனர். அவர்களுக்கு நாகியம்பட்டி ஊராட்சி காந்தி நகரில், 1.05 ஏக்கர் புறம்போக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை நேற்று முன்தினம் வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர்.
ஆனால் நாகியம்பட்டியை சேர்ந்த பிரபு, 40, தலைமையில், 30 பேர், நேற்று காலை, 'அதே ஊராட்சிக்கு அந்த நிலத்தை பயன்ப-டுத்த வேண்டும்' எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட முயன்-றனர். தம்மம்பட்டி போலீசார், வருவாய்த்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்களிடம், 'நிலம் அளவீடு தொடர்பாக ஆட்சேபனை இருந்தால், கலெக்டரிடம் புகார் அளிக்கலாம். மறியல், அளவீடு பணிகளை தடுப்பது போன்ற செயல்களில் ஈடு-படக்கூடாது' என, எச்சரித்தனர். அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்றதால், அனைவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச்-சென்றனர்.
இதுகுறித்து, வி.ஏ.ஓ., சரவணன் புகாரில், பிரபு உள்பட, 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பினர்.இதுகுறித்து தாசில்தார் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''மர சிற்ப கலைஞர்க-ளுக்கு பூம்புகார் நகரம் பெயரில், சிற்ப கலைகளை விற்க, கலெக்டர் மூலம் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.