/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓட்டளிக்க விடுமுறை வழங்காத நிறுவனம் மீது புகார் தெரிவிக்கலாம்
/
ஓட்டளிக்க விடுமுறை வழங்காத நிறுவனம் மீது புகார் தெரிவிக்கலாம்
ஓட்டளிக்க விடுமுறை வழங்காத நிறுவனம் மீது புகார் தெரிவிக்கலாம்
ஓட்டளிக்க விடுமுறை வழங்காத நிறுவனம் மீது புகார் தெரிவிக்கலாம்
ADDED : ஏப் 06, 2024 01:42 AM
சேலம்:ஓட்டளிக்க விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம் என, தொழிலாளர் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து
சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் கிருஷ்ணவேணி(அமலாக்கம்) அறிக்கை:
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு வரும், 19ல் நடக்க
உள்ளது. சட்டப்படி ஓட்டுப்பதிவு நாளில் தொழிலாளர்களுக்கு
சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில்
தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் ஓட்டளிக்கும்படி, அனைத்து
கடைகள், வர்த்தகம், உணவு, மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள்,
தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும்
பணியாளர்களுக்கு(தினக்கூலி, தற்காலிக தொழிலாளர் உட்பட்டோர்)
சட்டப்படி சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
ஓட்டுப்பதிவு
நாளில் பணிக்கு வராதவர்களின் சம்பளத்தில் எவ்வித பிடித்தமும்
செய்யக்கூடாது. தேர்தல் நடக்கும் தொகுதியை சாராத பணியாளர்களுக்கும்
அவர்களின் சொந்த தொகுதிக்கு சென்று ஓட்டளிக்க ஏதுவாக சம்பளத்துடன்
விடுமுறை அளிக்க வேண்டும்.மேலும் ஓட்டளிக்கும் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்களின் மீது புகார் தெரிவிக்கலாம்.
அதன்படி
தொழிலாளர் உதவி கமிஷனர்களான சேலம் கிருஷ்ணவேணி, 99449 10125,
ஏற்காடு சங்கர், 94453 98728, சேலம், 1ம் வட்டம் சிவக்குமார், 73735
32073, சேலம், 2ம் வட்டம் இளையராஜா, 82489 38528, ஆத்துார் அன்பழகன்,
97873 79061, மேட்டூர் சாந்தி, 94877 20922 ஆகியோரை தொடர்பு கொண்டு
புகார் தெரிவிக்கலாம்.

