/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பேத்திகளை காப்பாற்றி உயிரை விட்ட தாத்தா
/
பேத்திகளை காப்பாற்றி உயிரை விட்ட தாத்தா
ADDED : ஜூன் 02, 2024 02:28 AM
ஏத்தாப்பூர்:சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், தும்பலை சேர்ந்தவர் ராஜா, 54; சிக்கன் கடை வைத்துள்ளார். நேற்று அதிகாலை, 5:15 மணிக்கு ஏத்தாப்பூர், கருமந்துறை நெடுஞ்சாலையோரம் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அவருடன், அவரது பேத்திகளான ரித்திகாஸ்ரீ, 9, பூமிகா, 9, ஆகியோரும் நடந்து வந்தனர்.
அப்போது, கருமந்துறையில் இருந்து வேகமாக சேலம் நோக்கி வந்த தனியார் பஸ், மூன்று பேர் மீதும் மோதும் படி வந்தது.
இதை கவனித்து சுதாரித்த ராஜா, இரு பேத்திகளையும் தள்ளிவிட்டார். ஆனால், அவர் மீது பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாத்தா தள்ளிவிட்டதில் காயமடைந்த சிறுமியரை, மக்கள் மீட்டு தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பினர். ஏத்தாப்பூர் போலீசார், ராஜா உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.