sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காதல் திருமணம் செய்த ஜோடி ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சம்

/

காதல் திருமணம் செய்த ஜோடி ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சம்

காதல் திருமணம் செய்த ஜோடி ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சம்

காதல் திருமணம் செய்த ஜோடி ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சம்


ADDED : செப் 03, 2024 03:21 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: காதல் திருமணம் செய்த ஜோடி, பாதுகாப்பு கேட்டு ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த புத்திரகவுண்டன்பாளை-யத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் கலைவாணி, 26. எம்.இ.,சிவில் இன்ஜினியரிங் படித்து, வீட்டில் இருந்து வந்தார். ஏத்தாப்பூரை சேர்ந்த பாலசுப்ரமணி மகன் ஆனந்த், 27. பி.ஏ., தமிழ் படித்த இவர், கட்டுமான வேலைக்கு சென்று வருகிறார். இவர்கள், மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.கடந்த, 2023, மே 24ல், கோவை சுயமரியாதை திருமண நலச்-சங்கத்தில், திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்துள்-ளதை இரு வீட்டாருக்கும் தெரியப்படுத்தாமல், அவரவர் வீட்டில் இருந்து வந்தனர். வேறு இடத்தில், கலைவாணிக்கு திரு-மணம் செய்வதற்கான ஏற்பாடுகளை, அவரது பெற்றோர் செய்-துள்ளனர். இதையறிந்த அவர், கடந்த ஆக., 30ல், வீட்டில் இருந்து வெளியேறி திருவண்ணாமலைக்கு ஆனந்துடன் சென்றார். நேற்று சேலம் எஸ்.பி., அலுவலகத்துக்கு இருவரும் வந்தனர். பின் கலைவாணி, தனது பெற்றோரால் எனக்கும், கண-வரது உயிருக்கும் ஆபத்து உள்ளது என, புகார் மனு அளித்தார்.

இரு தரப்பு பெற்றோரை அழைத்து விசாரணை செய்யும்படி, காதல் ஜோடியை போலீஸ் பாதுகாப்புடன், ஆத்துார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, சேலம் எஸ்.பி., கவுதம்கோயல் அனுப்பி வைத்தார்.

ஆத்துார் மகளிர் போலீசார், இரு தரப்பு பெற்றோரையும் அழைத்தனர். ஆனால், கலைவாணியின் பெற்றோர், திரும-ணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து அவர்கள் வரவில்லை. அதன்பின், காதல் திருமணம் செய்த ஆனந்துடன், கலைவா-ணியை அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us