ADDED : மே 30, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், இடைப்பாடி அருகே வெள்ளாண்டிவலசை சேர்ந்தவர் தினேஷ்குமார், 33.
இவரது தாய் அங்கம்மாள், 55. இவர்கள் கடந்த, 27ல், 'டிஸ்கவர்' பைக்கில் சேலம் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு, பின் ஊருக்கு புறப்பட்டனர். காலை, 11:30 மணிக்கு, சூளைமேடு பிரிவு சாலை அருகே சென்றபோது, பைக் பின்புறம் லாரி மோதியது. இதில் தினேஷ்குமார் அணிந்திருந்த ெஹல்மெட் கழன்று விழுந்து, அவரும், அங்கம்மாளும் துாக்கி வீசப்பட்டனர். இருவரையும் மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை தினேஷ்குமார் இறந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.