/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மர்ம விலங்கு நடமாட்டம் எதிரொலி சாணாரபட்டி மக்களுக்கு எச்சரிக்கை
/
மர்ம விலங்கு நடமாட்டம் எதிரொலி சாணாரபட்டி மக்களுக்கு எச்சரிக்கை
மர்ம விலங்கு நடமாட்டம் எதிரொலி சாணாரபட்டி மக்களுக்கு எச்சரிக்கை
மர்ம விலங்கு நடமாட்டம் எதிரொலி சாணாரபட்டி மக்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஜூன் 10, 2024 01:26 AM
நங்கவள்ளி: நங்கவள்ளி, சாணாரப்பட்டி ஊராட்சி சன்னியாசி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி பழனிசாமி, 47. நேற்று முன்தினம் வெள்ளாடுகளை வீட்டின் முன் உள்ள பட்டியில் அடைத்தார். நேற்று காலை, 15 கிலோ வெள்ளாடு காணவில்லை. அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று பார்த்தபோது ஆட்டின் தலை மட்டும் கிடந்தது. இது
குறித்து பழனிச்சாமி தகவல்படி, மேட்டூர் வனச்சரகர் சிவானந்தன் தலைமையில் வனத்துறையினர் வந்தனர். தொடர்ந்து கேமராக்களை பொருத்தி மர்ம விலங்கு குறித்து கண்காணிக்கின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சி சார்பில், 'இரவில் மக்கள் வெளியே படுக்க வேண்டாம். சிறுவர்கள் தனியே வெளியே வரக்கூடாது' என, ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.