/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிப்பர் லாரி ஏறியதில் உடல் நசுங்கி பெண் பலி
/
டிப்பர் லாரி ஏறியதில் உடல் நசுங்கி பெண் பலி
ADDED : ஆக 18, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணத்தை சேர்ந்த கறுப்பு உடையார் மனைவி மலர்விழி, 40. உடையாப்பட்டியில் உள்ள, தனியார் உணவுப்பொருள் உற்பத்தி நிறுவனத்தில் பணிபு-ரிந்தார்.
இவரது மகன் இளவரசன், 23. தாயும், மகனும், நேற்று, டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில் சேலம் நோக்கி வந்தனர். மகன் ஓட்டினார்.காலை, 9:15 மணிக்கு, நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலையில் சந்-தியூர் அருகே வந்தபோது, பைக் பின்புறம் டிப்பர் லாரி மோதி-யது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த மலர்விழி மீது டிப்பர் லாரி ஏறியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். இளவரசன் சிறு காயத்துடன் தப்பினார். மல்லுார் போலீசார் விசாரிக்கின்-றனர்.

