/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேமநல நிதியை ரூ.7 லட்சமாக உயர்த்த வக்கீல் குமாஸ்தா சங்கம் வலியுறுத்தல்

ADDED : செப் 16, 2024 03:31 AM
சேலம்: சேலம் வக்கீல் குமாஸ்தா சங்கம் சார்பில் சங்கர் நகரில் உள்ள ரோட்டரி ஹாலில் மாநில பொதுக்குழு கூட்டம், மூத்த வக்கீல் குமாஸ்தாக்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா நேற்று நடந்தது. தலைவர் ராஜா ஸ்டாலின் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் லெங்காராம், மூத்த வக்கீல் குமாஸ்தாக்களுக்கு பொற்கிழி வழங்கினார்.
தொடர்ந்து வக்கீல் குமாஸ்தா சேம நல நிதி எனும் இறப்பு நிதி, 4 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதை, 7 லட்சம் ரூபாயாக உயர்த்தல்; சம்பளமின்றி பணிபுரியும் வக்கீல் குமாஸ்தாக்களுக்கு இலவச வீடு வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தல்; நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில சேமநல கமிட்டி அரங்கேந்தி, சென்னை உயர்நீதிமன்ற குமாஸ்தா சங்கத்தலைவர் கிருஷ்ணன், சேலம் வக்கீல் சங்க செயலர் நரேஷ்பாபு, அரசு வக்கீல்கள் தம்பிதுரை, மதன்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள், வக்கீல் குமாஸ்தாக்கள் பங்கேற்றனர்.