/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அமைச்சருக்கு அ.தி.மு.க., - மா.செ., வாழ்த்து
/
அமைச்சருக்கு அ.தி.மு.க., - மா.செ., வாழ்த்து
ADDED : பிப் 24, 2025 03:35 AM
ஓமலுார்,: தி.மு.க., அரசில் மக்கள் படும் அவல நிலை குறித்த துண்டு பிர-சுரம், அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை, வீதி வீதியாக சென்று வழங்கும் நிகழ்ச்சி, திண்ணை பிரசாரம், ஓமலுாரில் நேற்று நடந்தது.
அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்-கோவன் தலைமை வகித்தார். தாலுகா அலுவலக சாலை, கடை-வீதி, தர்மபுரி சாலை வழியே சென்ற கட்சியினர், துண்டு பிரசுரங்-களை வினியோகித்து, மீண்டும் பஸ் ஸ்டாண்ட் எதிரே வந்து சேர்ந்தனர். எம்.எல்.ஏ.,க்கள் மணி, ராஜமுத்து, சித்ரா, நல்ல-தம்பி, ஜெயசங்கரன், சுந்தரராஜன், மாநில ஜெ., பேரவை துணை செயலர் விக்னேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணன், வெற்றிவேல், ஓமலுார் ஒன்றிய செயலர்கள் ராஜேந்திரன், செந்-தில்குமார், விமல்ராஜ் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.தொடர்ந்து, ஓமலுார் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் இளங்-கோவன் அளித்த பேட்டி: ஓமலுாரில் பேசிய அமைச்சர் நேரு, நகராட்சியோடு இணைக்கப்படும் பகுதிகளுக்கு, 100 நாள் திட்-டப்பணி வழங்கப்படும் என, பொய் தகவலை பரப்புகிறார். இதை கண்டிக்கிறேன். அதேநேரம், 'அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த நல்லது தொடரும்' என பேசிய அமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.மேலும் கட்சி அலுவலகத்தில், ஜெ., பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம், புறநகர் மாவட்ட செயலர் மணி தலைமையில் நடந்தது. அதில், அ.தி.மு.க., புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். ஜெ., பேரவை மாநில துணை செயலர் விக்னேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வா-கிகள் பங்கேற்றனர்.

