/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆனைமடுவு அணை நீர்மட்டம் 'கிடுகிடு'
/
ஆனைமடுவு அணை நீர்மட்டம் 'கிடுகிடு'
ADDED : ஆக 31, 2024 01:31 AM
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டையில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கன அடி நீர் தேங்கும்படி ஆனைமடுவு அணை உள்ளது. கடந்த ஏப்ரல் இறுதியில் வெயில் தாக்கத்தால் அணையில் வெறும், 10 அடி உயரத்தில் மட்டும் தண்ணீர் இருந்-தது. ஆங்காங்கே வறண்டு பாளம் பாளமாக வெடித்து காணப்பட்-டது. மே மாத மழையால், 16.07 அடி உயர்ந்து ஜூலை இறு-தியில், 26.07 அடி உயரத்தில் தண்ணீர் இருந்தது.
இந்நிலையில் ஆகஸ்டில் பெய்த தொடர் மழையால் அணை நீர்-மட்டம் படிப்படியாக உயர்ந்து, நேற்று, 44.07 அடி உயரத்தில், 96.91 மில்லியன் கன அடி நீர் தேங்கியிருந்தது. அணைக்கு நீர்வ-ரத்து வினாடிக்கு, 27 கன அடியாக
இருந்தது. ஒரே மாத மழையில், 18 அடி உயரம் தண்ணீர் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இரு வாரங்-களாக சந்துமலை, பெரியகுட்டிமடுவு, அருநுாற்றுமலை உள்-ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிக-ரித்து அணை நீர்மட்டம் உயர்ந்தது'
என்றனர்.