/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆடிட்டர் மீது தாக்குதல்: போலீசார் விசாரணை
/
ஆடிட்டர் மீது தாக்குதல்: போலீசார் விசாரணை
ADDED : ஆக 17, 2024 04:50 AM
சேலம்: ஆடிட்டர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம், குகை மாரியம்மன் காளியம்மன் கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்தது. முன்னதாக அதனை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கடந்த, 3ல் நடந்தது. இதில் பங்கேற்ற கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் கருத்து கேட்கப்பட்டது. அதில் வக்கீலும், ஆடிட்டருமான சீனிவாச பெருமாள் சில கருத்-துக்களை தெரிவித்தார்.
மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் உருளுதண்டம் போடுவர்; கோவில் வராண்டாவில் பந்தல் அமைத்தால் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும். மாற்று இடத்தில் பந்தல் போடலாம் என தெரிவித்தார். ஆனால், ஆண்டுதோறும் அதே இடத்தில் தான் பந்தல் போடுகிறோம் என அதற்கு மறுப்பு தெரிவித்தனர். கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது, சீனிவாச பெருமாளை கோவில் தொடர்பாக கருத்து தெரிவிக்க நீங்கள் யார் என கேட்டு, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து சீனிவாச பெருமாள், தமிழக முதல்வர், டி.ஜி.பி., அலுவலகம், சேலம் மாநகர கமிஷனருக்கு புகார் மனுக்களை அனுப்பினார். மனுவை விசாரிக்க அன்னதானப்பட்டி போலீசா-ருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சீனிவாச பெருமாளிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள 'சிசிடிவி'கேம-ராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

