ADDED : மார் 24, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், பள்ளி சாரா, வயது வந்தோர் இயக்கத்தில் எழுத படிக்க தெரியாத சிறைவாசிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம் அமல்படுத்தப்பட்டது.
சேலம் மத்திய சிறைச்சாலையில், 195 ஆண்கள், 26 பெண்கள் என, 221 பேருக்கு, செப்டம்பர் முதல், 11 தன்னார்வலர்கள் மூலம் எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று, சிறை தேர்வு மையத்தில் அடிப்படை மதிப்பீடு தேர்வு நடந்தது. சிறை கண்காணிப்பாளர் வினோத், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் பார்வையிட்டனர். வினாத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

