/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
/
மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
ADDED : மே 21, 2024 11:49 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகம் முன், மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சித்தார்.சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் செல்வம், 39, மாற்றுத்திறனாளி, நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் வந்த இவர், மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி, தீக்குளிக்க முயற்சித்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இதில், முதல் மனைவி விவாகரத்து செய்த நிலையில், இரண்டாவது மனைவி ராணி என்பவருடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும், கடை வைக்க வாங்கி வைத்திருந்த, 50 ஆயிரம் ரூபாயை அவர் எடுத்து கொண்டு ஓடி விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, அவரை சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

