/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
/
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
ADDED : மே 13, 2024 07:23 AM
சேலம் : 'அர்டர்காம் மீடியா' ஊடக அமைப்பு, ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதோடு கல்வி துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரித்து வருகிறது. சமீபத்திய நிகழ்வை, கோவையில் நடத்தியது.
அதில் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்குட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் செந்தில்குமார், 'கற்றல், கற்பித்தல் முறையில் புதுமை' தலைப்பில் பேசினார். அதில் 'உயர்கல்வி மற்றும் மாணவ திறனை மேம்படுத்தும் புதுமை முயற்சிகளில் சிறந்து விளங்கும் கல்லுாரி' என்ற விருது, அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு வழங்கப்பட்டது.
அதேபோல், 'அப்சர்வ் நவ்' மீடியா மற்றும் உலகளாவிய வணிக தலைமை மன்றம், இந்திய, உலக அளவில் கல்வி, பொருளாதாரம், மனித வளம் போன்ற தலைப்புகளில் பல்வேறு மாநாடுகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் இவ்விரு அமைப்புகள் நடத்திய கல்வியியல் மாநாட்டில், துறை டீன் செந்தில்குமார் பேசினார். அதில் அவருக்கு, அவரது கல்வி சார்ந்த முன்மாதிரி நடவடிக்கைகளை கருத்தில்கொண்டு, 'புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகளில் சிறந்து விளங்குபவர்' என்ற விருது வழங்கப்பட்டது.
இதனால், பல்கலை வேந்தர் கணேசன், துணை தலைவர் அனுராதா, துறை பேராசிரியர்கள் உள்ளிட்டோர், டீனை பாராட்டினர்.