/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரசாயன உர பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு
/
ரசாயன உர பயன்பாட்டை குறைக்க விழிப்புணர்வு
ADDED : ஜூலை 01, 2024 03:39 AM
வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வேளாண் துறை சார்பில், ரசாயன உர பயன்பாடு குறைத்தல் குறித்து விழிப்புணர்வு முகாம் புத்துார் அக்ரஹாரத்தில் நேற்று நடத்தப்பட்டது. உதவி இயக்குனர் கிரிஜா தலைமை வகித்து, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். முகாம் நோக்கம் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன் பேசினார்.
தொடர்ந்து ஓய்வு பெற்ற துணை வேளாண் அலுவலர் பழனிசாமி, அறுவடை முடிந்த பின் சில மாதங்களுக்கு பயிர் சாகுபடி செய்யாமல் விட்டு வளர்ந்த செடிகளை மடக்கி உழுது மண்ணை வளப்படுத்தி பின் சாகுபடி செய்ய அறிவுறுத்தினார்.
துணை வேளாண் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ட்ரைக்கோடெர்மாவிரிடி கொண்டு சோளம் விதை நேர்த்தி செயல்முறை விளக்கம் அளித்தார். வேளாண் வணிக உதவி வேளாண் அலுவலர் நடராஜன், உதவி தோட்டக்கலை அலுவலர் ராமசாமி ஆகியோரும், மானிய திட்டங்களை விளக்கினர். 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.