/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேம்பு மரக்கன்று பெற விவசாயிக்கு அழைப்பு
/
வேம்பு மரக்கன்று பெற விவசாயிக்கு அழைப்பு
ADDED : ஆக 11, 2024 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்தியாப்பட்டணம்: வேம்பு மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்-பட்டுள்ளது.
இதுகுறித்து அயோத்தியாப்பட்டணம் வேளாண் உதவி இயக்-குனர் சரஸ்வதி அறிக்கை:
அயோத்தியாப்பட்டணம் வேளாண் விரிவாக்க மையத்தில் முதல்-வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் வறண்ட தரிசு நிலங்களில் கணிசமான வருவாய் ஈட்டி கொடுக்கும் வேம்பு மரக்கன்றுகள், 2,300 வரப்பெற்றுள்ளன.
அதனால் தேவைப்படும் விவசாயிகள், நில ஆவணங்களான கணினி சிட்டா நகல், ஆதார் நகல், மார்பளவு புகைப்படம் இரண்டு ஆகியவற்றை, அயோத்தியாப்பட்டணம் வட்டார வேளாண் அலுவலகத்தில் வழங்கி இலவசமாக பெற்றுச்செல்-லலாம்.

