/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பிரசாரத்தை முடிக்க வேண்டும்'
/
'அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பிரசாரத்தை முடிக்க வேண்டும்'
'அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பிரசாரத்தை முடிக்க வேண்டும்'
'அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பிரசாரத்தை முடிக்க வேண்டும்'
ADDED : மார் 31, 2024 04:10 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், லோக்சபா தொகுதி வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பொது பார்வையாளர் பாட்டீல் தலைமை வகித்து பேசியதாவது:
சேலம் லோக்சபாவில் போட்டியிடும், 25 வேட்பாளர்களும், தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அத்துடன் தேர்தல் செலவின கணக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
முன் அனுமதி பெற்று தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். குறிப்பாக அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் பிரசாரம், பொதுக்கூட்டத்தை முடிக்க வேண்டும். தனிப்பட்ட நபர் மீது தேர்தல் தொடர்பான புகாரில், முழுமையான தகவல்களை குறிப்பிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிரசாரம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருவதால், நடத்தை விதிகளை மீறுதல் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட தேர்தல் நடத்தும்
அலுவலர் பிருந்தாதேவி, செலவின பார்வையாளர் ராஜிவ்சங்கர் உடனிருந்தனர்.

