/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சோதனை செய்ய விடாத பா.ஜ.,வினர் மீது வழக்கு
/
சோதனை செய்ய விடாத பா.ஜ.,வினர் மீது வழக்கு
ADDED : ஏப் 11, 2024 01:42 AM
சேலம்:சேலம், குரங்குச்சாவடி, சாஸ்தா நகர், கே.எஸ். அடுக்கு மாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு, சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ., தலைவர். இவரது வீட்டில் நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திச் சென்றனர். உடனே சூரமங்கலம் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் போலீசார் சோதனை செய்ய முயன்றனர். அதற்கு பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். இருப்பினும் சோதனை நடத்தப்பட்ட நிலையில் எதுவும் சிக்கவில்லை.
ஆனால், போலீசாரை சோதனை செய்ய விடாமல் தடுத்தல், அனுமதியின்றி கூடுதல், அரசு ஊழியரை பணிபுரிய விடாமல் தடுத்தல் பிரிவுகளில் சுரேஷ்பாபு, மாநகர மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ், ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவர் கோபிநாத் உட்பட, 10 பேர் மீது சூரமங்கலம் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

