/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மத்திய அரசின் துாண்டுதலில் காவிரி நடுவர் மன்றம் பேச்சு? மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் சந்தேகம்..
/
மத்திய அரசின் துாண்டுதலில் காவிரி நடுவர் மன்றம் பேச்சு? மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் சந்தேகம்..
மத்திய அரசின் துாண்டுதலில் காவிரி நடுவர் மன்றம் பேச்சு? மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் சந்தேகம்..
மத்திய அரசின் துாண்டுதலில் காவிரி நடுவர் மன்றம் பேச்சு? மேகதாது விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் சந்தேகம்..
ADDED : ஆக 04, 2024 03:51 AM
மேட்டூர்: ''உச்சநீதிமன்ற தீர்ப்பிலோ, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பிலோ, மேகதாது என்ற வார்த்தையே இல்லாத நிலையில், இதுகுறித்து காவிரி நடுவர் மன்றம் பேசுவது மத்திய அரசின் துாண்டுதலாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,'' என, நீர்வளத்-துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்-றப்படும் நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் நேற்று ஆய்வு செய்தார். அணையின் வலது, இடது கரைகள், 16 கண் மதகு பகுதி, நீர்மின் நிலையங்கள், அணை பூங்காவை பார்வையிட்டார்.
தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன், நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் கருணாநிதி, மாயனுார் தடுப் பணையை கட்-டினார். பின் தடுப்பணைக்கு பதில் மோகனுார்
உள்ளிட்ட இடங்களில் கதவணைகள் கட்டப்பட்டுள்ளன. ஏரி, குளங்களை நிரப்ப, தற்போது நடவடிக்கை இல்லை. உபரிநீர் ஏரியில் நிரப்பும் திட்டம் கிடப்பில் போடவில்லை. அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் நிலம் இழப்பீடு தொடர்பாக நீதிமன்-றத்தில் வழக்கு உள்ளது. அவை முடிந்ததும் ஓரிரு மாதங்களில் திறக்கப்படும்.
சரபங்கா, வசிஷ்ட நதி வரை, காவிரி உபரிநீர் திட்டம் செயல் ப-டுத்துவது குறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும். கர்நாடக அரசு எவ்வளவு முயற்சி செய்தாலும் மேகதாது அணையை கட்ட விடவே மாட்டோம் என்பதில் திட்டவட்டமாக உள்ளோம். மேட்டூர் உபரிநீரை பயன்படுத்தக்கூடாது என வழக்கு போட்டு-விட்டு, தற்போது உபரிநீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்க முடியாது. மேட்டூர் அணை உபரிநீரை முழுமையாக பயன் -படுத்த வேண்டும் என்பது எங்கள் ஆசையும் கூட. அதற்கு போதிய அளவில் நிதி தேவைப்படுகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பிலோ, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பிலோ, மேக-தாது என்ற வார்த்தையே இல்லாத நிலையில், இதுகுறித்து காவிரி நடுவர் மன்றம் பேசுவது மத்திய அரசின் துாண்டுதலாக இருக்-குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்துக்கு எதி-ரான நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது.
காவிரி நடுவர் மன்றத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக மட்டும் தான் பேச முடியும். அணை கட்ட உத்தரவிடுவதற்கு அதிகாரம் இல்லை.
தற்போது வரை, 52 ஏரிகளில் உபரிநீரை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏரிகளில் காவிரியின் உபரிநீர் நிரப்பும் திட்-டத்தை மேச்சேரி வரை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்-கப்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் காவிரி நீரை பயன்படுத்தி நீர்பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என, அந்த மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வரிடம் எடுத்துரைத்து ஆய்வு நடத்தப்-பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, ஊரக வளர்ச்சி திட்ட முகமை கூடுதல் கலெக்டர் லலித் ஆதித்ய நீலம், சேலம், தர்மபுரி எம்.பி.,க்கள் செல்வகணபதி, மணி, சேலம் வடக்கு, மேட்டூர் எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், சதாசிவம் உள்ளிட்ட பலர் பங்-கேற்றனர்.