/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'கோவிந்தா' கோஷம் முழங்க கும்பாபிேஷகம் கோலாகலம்
/
'கோவிந்தா' கோஷம் முழங்க கும்பாபிேஷகம் கோலாகலம்
ADDED : மே 30, 2024 01:04 AM
வீரபாண்டி, சேலம் மாவட்டம் காகாபாளையம் அருகே ராக்கிப்பட்டி, செங்கோடம்பாளையத்தில் சென்றாய பெருமாள் மலைக்கோவில் உள்ளது. அக்கோவில் கும்பாபிேஷகத்துக்கு, கடந்த, 19ல் முகூர்த்த கம்பம் நடப்பட்டு, 27ல் முறைப்படி தொடங்கியது. அன்றே தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜைகளை, பட்டாச்சாரியார்கள், வேத மந்திரம் முழங்க தொடங்கினர். நேற்று முன்தினம் விமானங்களில் கோபுர கலசம் வைத்தல், மூலவர், பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருத்து சாத்துதல் நடந்தது.
நேற்று காலை, 5:30 மணிக்கு, 4 கால யாக சாலை பூஜை, மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது. பட்டாச்சாரியார்கள், யாகத்தில் வைத்து பூஜித்த புனிதநீர் கலசங்களை மேள தாளம் முழங்க, கோவிலை வலம் வந்து காலை, 6:30 மணிக்கு விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தனர்.
அப்போது கூடியிருந்த பக்தர்கள், 'கோவிந்தா, கோவிந்தா' கோஷம் முழங்கி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மூலவர் பெருமாள், பரிவார தெய்வங்களுக்கு புனிதநீரால் அபிேஷகம் செய்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.