/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரசாயன உர பயன்பாடு விழிப்புணர்வு பயிற்சி
/
ரசாயன உர பயன்பாடு விழிப்புணர்வு பயிற்சி
ADDED : ஜூன் 27, 2024 04:05 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வேளாண் துறையின், 'அட்மா' திட்டத்தில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பது குறித்து விவசாயி
களுக்கு விழிப்புணர்வு பயிற்சி தம்மநாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியர் ஆனந்த், ரசாயன உரங்களை குறைத்து உயிர் உரங்கள், பசுந்தாள் உர பயிர் சாகுபடி, மண்புழு உரம், ஊட்டம் ஏற்றிய தொழு உரம் ஆகியவற்றை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வேளாண் அலுவலர் புவனேஸ்வரி, வேளாண் திட்டங்கள், மானியங்கள் குறித்து விளக்கினார். ஊட்டம் ஏற்றிய தொழு உரம், பசுந்தாள் உரம் தயாரித்தல் குறித்து, உதவி வேளாண் அலுவலர்கள் நந்தகுமார், வைரபெருமாள் ஆகியோர், வயலில் நேரடியாக செயல் விளக்கம் அளித்தனர்.