/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடிநீர் புகாரில் உடனே நடவடிக்கை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை
/
குடிநீர் புகாரில் உடனே நடவடிக்கை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை
குடிநீர் புகாரில் உடனே நடவடிக்கை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை
குடிநீர் புகாரில் உடனே நடவடிக்கை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை
ADDED : மே 07, 2024 10:26 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:
மாநகராட்சி, நகராட்சிகள், டவுன் பஞ்சாயத்துகள், ஒன்றியங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்படும் குடிநீரின் அளவு, எந்தெந்த பகுதிகளில் அதன் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என, ஆய்வு செய்யப்பட்டது. தேவைக்கேற்ப புது நீராதாரங்களை ஏற்படுத்த வேண்டும். பயன்படுத்தாமல் நீர் ஆதாரங்கள் இருந்தால் அதை மேம்படுத்தி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். குடிநீர் குழாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக அலுவலர்களை ஒருங்கிணைந்து வாட்ஸாப் குழு மூலம் நடவடிக்கை எடுக்க வழி செய்யப்பட்டுள்ளது.குடிநீர் தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குவதை அனைத்து துறை அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.