/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாவட்ட செஸ் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பாராட்டு
/
மாவட்ட செஸ் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பாராட்டு
மாவட்ட செஸ் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பாராட்டு
மாவட்ட செஸ் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பாராட்டு
ADDED : ஆக 03, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மாவட்ட சதுரங்க சங்கம், டாக்டர் கே.என்.ராவ் நினைவு மருத்துவமனை இணைந்து, மாவட்ட அளவில் செஸ் போட்டியை, மருத்துவமனை வளாகத்தில் நடத்தின.
௯ வயதுக்குட்பட்ட இரு பாலர் ஒரு குழுவாகவும், ௧௨, ௧௫, 20 வயதுக்குட்பட்ட இரு பாலர் மற்றொரு குழுவாகவும் என, 376 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அனைவரும் திறமையை வெளிப்படுத்தினர்.
அதில் வெற்றி பெற்றவர்களுக்கு, சேலம் பாலிகிளினிக் இயக்குனர் ராஷ்மி ராவ், சேலம் செஸ் அசோசியேசன் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கே.என்.ராவ் மருத்துவமனை நிர்வாகம், பணியாளர்கள்
செய்திருந்தனர்.