/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரி மண் அள்ளுவதில் தகராறு: பா.ஜ., பிரமுகர் மீது 'பகீர்'
/
ஏரி மண் அள்ளுவதில் தகராறு: பா.ஜ., பிரமுகர் மீது 'பகீர்'
ஏரி மண் அள்ளுவதில் தகராறு: பா.ஜ., பிரமுகர் மீது 'பகீர்'
ஏரி மண் அள்ளுவதில் தகராறு: பா.ஜ., பிரமுகர் மீது 'பகீர்'
ADDED : ஆக 11, 2024 02:43 AM
இடைப்பாடி: இடைப்பாடி அருகே வெள்ளார்நாயக்கன்பாளையம், குண்டியாம்-பட்டி ஏரியில் விவசாயிகள், வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதித்துள்ளது. ஆனால், பா.ஜ., நகர தலைவர் சந்திரன் உள்பட சிலர், நேற்று ஏரியில் மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன், டிராக்டர்களை முற்றுகையிட்டனர்.
அப்போது விவசாயிகள் போர்வையில் மண் வியாபாரிகள் வண்டல் மண்ணை எடுத்துச்செல்வதாக குற்றம்சாட்டினர்.
தொடர்ந்து சந்திரனுக்கும், மண் அள்ளுபவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் மண் அள்ளிய விவசாயிகள், இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். அதில் 'சவுரிபாளையத்தை சேர்ந்த விவசாயிகளான நாங்கள், குண்டியாம்-பட்டி ஏரியில் அரசு அனுமதியுடன் மண் எடுத்து வருகிறோம். ஆனால் சந்திரன் உள்பட, 10 பேர், மண் அள்ள பயன்படுத்திய வாகனங்களை தடுத்து, 'ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் மண் அள்ள அனுமதிப்பேன். இல்லையெனில் வாகனங்களை எரிப்பேன்' என மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.