ADDED : ஜூலை 31, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி:சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த படையாச்சியூரை சேர்ந்தவர் முருகன், 58. இவரது மனைவி பொன்னம்மாள், 54. கூலித்தொழிலாளிகளான தம்பதியர், சேசன்சாவடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று, 'எக்ஸல்' மொபட்டில் சென்றுகொண்டிருந்தனர். முருகன் ஓட்டினார். ஹெல்மெட் அணியவில்லை.
மாலை, 4:00 மணிக்கு, சேசன்சாவடி பஸ் ஸ்டாப் அருகே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற, விபத்து மீட்பு வாகனம், மொபட் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் பொன்னம்மாள் உயிரிழந்தார். முருகனை, மக்கள் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு அவரும் உயிரிழந்தார். மீட்பு வாகன டிரைவரான, கோவை, புளியங்குளத்தை சேர்ந்த செல்வம், 50, என்பவரிடம் வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.