/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணையில் செத்து மிதந்த மீன்கள்
/
மேட்டூர் அணையில் செத்து மிதந்த மீன்கள்
ADDED : மே 14, 2024 07:37 PM
மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் வறட்சியால் நேற்று அணைக்கு வினாடிக்கு, 138 கன அடி நீர் வந்தது. அணை நீர்மட்டம், 50.57 அடியாக இருந்தது. நீர் இருப்பு குறைவாக உள்ள நிலையில், நேற்று முன்தினம் மாலை சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்தது.
இந்நிலையில், அணை இடதுகரை பகுதியில் நேற்று காலை திலேப்பியா, வாளை, கல்பாஸ் உள்ளிட்ட மீன்களின் குஞ்சுகள் இறந்து கரையோரம் ஒதுங்கின. சேலம் மாவட்ட தனி குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் முதல், ஆங்காங்கே கரையோரம் சிறு வகை மீன்கள் செத்து கரை ஒதுங்கின.
தொடர்ந்து மீன்வளத்துறை துணை இயக்குனர் சுப்ரமணியன்(தர்மபுரி மண்டலம்) தலைமையில் மேட்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் உமா கலைசெல்வி முன்னிலையில் ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.
உமா கலைசெல்வி கூறுகையில், ''சீதோஷ்ண நிலை மாற்றத்தால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் இறந்துள்ளன,'' என்றார்.

