/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இந்து யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை
/
இந்து யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை
ADDED : ஜூன் 13, 2024 06:45 AM
சேலம் : விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சேலம் மாவட்ட திருமடங்கள் பிரிவு பொறுப்பாளர் கமல்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் நேற்று, சேலம் கலெக்டர் பிருந்தாதேவியிடம் மனு அளித்து அதை ஜனாதிபதிக்கு அனுப்ப கோரிக்கை விடுத்தனர்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜம்மு - காஷ்மீருக்கு செல்லும் இந்து யாத்ரீகர்களுக்கு தேவையான பாதுகாப்பை மத்திய அரசு வழங்க வேண்டும். அதன்மூலம் அங்குள்ள கோவில்களுக்கு இந்துக்கள் எந்த அச்சுறுத்தல், தீங்கின்றி, யாத்திரையை மேற்கொள்ள முடியும். மறைந்திருந்து தொடர்ச்சியான பயங்கரவாத நடவடிக்கையை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளை உடனே கைது செய்து கொல்லப்பட்ட இந்துகளுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும். இது மற்ற பயங்கரவாதிகள், எல்லை தாண்டி உள்ள அவர்களது ஆதரவாளர்களுக்கு வலுவாக தெரியப்படுத்தும்படி நடவடிக்கை இருக்க வேண்டும்.