/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.,வினர் ஆர்ப்பாட்டம்
/
மின்கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.,வினர் ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.,வினர் ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 26, 2024 02:15 AM
சேலம்: தே.மு.தி.க.,வின், சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்-தது. மாநகர மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அதில், உயர்த்திய மின் கட்டணத்தை தமிழக அரசு திரும்ப பெறக்கோரியும், ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகள் வழங்காத தமிழக அரசை கண்டித்தும் கோஷம் எழுப்-பினர். மேலும் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற்று தராத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதில் மாநில இளைஞர் அணி துணை செயலர் பாலமுருகன், மாநகர மாவட்ட அவைத்தலைவர் செல்வகுமார், செவ்வாய்ப்-பேட்டை பகுதி செயலர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
கண்களில் கறுப்பு துணி
சேலம் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில், ஆத்துார் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது. அதில் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து கண்களில் கறுப்பு துணி கட்டியும், மெழுகுவர்த்தி ஏந்தியும், மின் கட்டண உயர்வு மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் மாநில தொண்டர் அணி செயலர் ஷாகுல்ஹமீது உள்பட பலர் பங்கேற்-றனர். அதேபோல் இடைப்பாடியில், சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலர் சுரேஷ்பாபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.