/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவில் வழியில் இறைச்சி கழிவால் சிரமம்
/
கோவில் வழியில் இறைச்சி கழிவால் சிரமம்
ADDED : மே 20, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி பிரிவு அருகே உள்ள பொய்மான் கரட்டில் சூரியலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
அங்கு பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடு நடப்பதால் ஏராளமான பக்தர்கள் கூடுகின்றனர். சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் இருந்து மலை மீது உள்ள கோவிலுக்கு மண் சாலை செல்கிறது. கோவிலுக்கும் செல்லும் அப்பாதையில், ஆடு, கோழி, மீன், இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். அதை ஏராளமான நாய்கள், இழுத்து, சாலையில் விட்டு விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், துர்நாற்றத்தால் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மலைப்பாதையில் இறைச்சி கழிவை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

