/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இரட்டிப்பு பணம் தருவதாக சேலத்தில் மோசடி நிறுவன இயக்குனர்கள் கைது - ரூ.3 கோடி பறிமுதல்
/
இரட்டிப்பு பணம் தருவதாக சேலத்தில் மோசடி நிறுவன இயக்குனர்கள் கைது - ரூ.3 கோடி பறிமுதல்
இரட்டிப்பு பணம் தருவதாக சேலத்தில் மோசடி நிறுவன இயக்குனர்கள் கைது - ரூ.3 கோடி பறிமுதல்
இரட்டிப்பு பணம் தருவதாக சேலத்தில் மோசடி நிறுவன இயக்குனர்கள் கைது - ரூ.3 கோடி பறிமுதல்
ADDED : பிப் 24, 2025 03:54 AM
சேலம்: சேலத்தில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி, முதலீடு பெற்று மோசடி செய்த நிறுவனத்தில், போலீசார் சோதனை நடத்தி, 3 கோடி ரூபாய், பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதன் இயக்குனர்கள் உள்பட, 14 பேரை கைது செய்தனர்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜேஷ், 35; கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யபாமா, 25; இருவரும் சேலம், ஸ்வர்ணபுரி, அய்யர் தெருவில், இரு ஆண்டுக்கு முன், 'ரீ கிரியேட் பியூச்சர் இந்தியா' பெயரில் வீட்டு உபயோக பொருள் விற்பனை நிறுவனத்தை தொடங்கினர். நிறுவனத்தில், 50,000, 1 லட்சம், 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், அதற்கேற்ப குறிப்பிட்ட மாதத்தில் பணம் இரட்டிப்பாக தருவதாக அறிவித்-தனர். அதை நம்பி, 200க்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். நேற்று முன்தினம் மாலை, நிறுவனம் காலி செய்யப்படுவதாக தகவல் கிடைக்க, முதலீட்டாளர்கள் முற்றுகை-யிட்டனர்.மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் வேல்முருகன், கீதா உள்-ளிட்ட அதிகாரிகள், பள்ளப்பட்டி போலீசார் சென்று விசாரித்-தனர். அதில் கோடிக்கணக்கில் முதலீடு பெறப்பட்டதும், அதற்கு ஏஜன்டாக, 70 பேர் செயல்பட்டதும் தெரிந்தது. ராஜேஷ், சத்ய-பாமா, அவரது கணவரான, எம்.ராஜேஷ், 30, சேலத்தை சேர்ந்த ஹரிபாஸ்கர் ஆகியோரை, ஸ்டேஷனுக்கு அழைத்துச்செல்ல போலீசார் முயன்றனர். நிறுவன ஏஜன்டுகள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாரை பணிபுரிய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக, சேலம், வெள்ளாளப்-பட்டி ராஜேந்திரன், 42, வேம்படிதாளம் குமார், 50, காளிப்பட்டி பழனிவேல், 45, தளவாய்பட்டி கோபாலகிருஷ்ணன், 37, மகா-தேவன், 34, நெத்திமேடு பிரபு, 29, கோட்டகவுண்டம்பட்டி ராஜேஸ்வரி, 39, அஸ்தம்பட்டி ராணி, 35, மூன்று ரோடு கலா, 40, இளம்பிள்ளை கலைவாணி, 39, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து நிறுவனத்தில் சோதனை செய்து, 3 கோடி ரூபாய், 347 கிராம் தங்கம், 2,472 கிராம் வெள்ளி மற்றும் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இயக்குனர்கள் ராஜேஷ், சத்யபாமா, எம்.ராஜேஷ், ஹரிபாஸ்கரை நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகை யில், 'ஆயிரத்துக்கும் மேற்பட்-டோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளதாக தெரிகி-றது. எங்கெங்கு பணம் வைத்துள்ளனர், என்ன செய்தார்கள் என, விசாரணை முடிவில் தெரிய வரும். நிறுவனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது' என்றனர்.