/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., திட்டங்கள் மக்களிடம் எழுச்சி:கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் பேச்சு
/
தி.மு.க., திட்டங்கள் மக்களிடம் எழுச்சி:கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் பேச்சு
தி.மு.க., திட்டங்கள் மக்களிடம் எழுச்சி:கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் பேச்சு
தி.மு.க., திட்டங்கள் மக்களிடம் எழுச்சி:கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் பேச்சு
ADDED : ஏப் 08, 2024 02:32 AM
வாழப்பாடி;கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மலையரசன், ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடி ஒன்றியம், பேரூர் பகுதிகளான குமாரபாளையம், தேக்கல்பட்டி, திருமனுார், வேப்பிலைப்பட்டி, அண்ணா நகர், வாழப்பாடி சந்தை திடல், புதுப்பாளையம், மங்கம்மா சாலை, பேளூர் சிவன் கோவில், குறிச்சி ரோடு, புதிய, பழைய பஸ் ஸ்டாண்டுகள், பெருமாபாளையம், ராமநாதபுரம், ஆதிதிராவிடர் காலனி பகுதிகளில் உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது மலையரசன் பேசியதாவது: தி.மு.க., ஆட்சி வந்தால், மக்களுக்கு அதிகளவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்துக்கு விடியல் கிடைக்கும் ஆட்சியாக, தி.மு.க., உள்ளது. மகளிருக்கு இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், நான் முதல்வன் உள்பட பல்வேறு திட்டங்களை, மக்களுக்கு செயல்படுத்தி வருகிறது. தி.மு.க., ஆட்சியின் திட்டங்கள் மக்களிடம் எழுச்சி பெற்றுள்ளது.
மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்த திட்டங்களையும் அறிவிக்காமல் ஏமாற்றி வருகிறது. அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., மக்களுக்கு, திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. 'இண்டியா' கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள பிரச்னைகள், கோரிக்கைகள் தெரிவித்துள்ளனர். நான் வெற்றி பெற்றதும், இக்கோரிக்கைகள் அனைத்தும் சரிசெய்யப்படும். தி.மு.க., ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால், கள்ளக்குறிச்சி உள்பட அனைத்து தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்.இவ்வாறு அவர் பேசினார்.
சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி, வாழப்பாடி ஒன்றிய செயலர் சக்கரவர்த்தி, மாதேஸ்வரன், வாழப்பாடி பேரூர் செயலர் செல்வம், பேளூர் செயலர் சுப்ரமணி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

