/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதை ஊசி கலாசாரம் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை
/
போதை ஊசி கலாசாரம் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை
ADDED : ஆக 09, 2024 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அதில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் பங்கேற்றார். அவர், அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கு, மாநகரில் போதை மாத்திரை, போதை ஊசி கலாசாரம், லாட்டரி விற்பனை, சட்ட விரோத மது விற்பனை உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார். சேலம் போலீஸ் கமிஷனர் பிரவீன்-குமார் அபினபு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.