ADDED : மார் 22, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மக்கள் அச்சமின்றி ஓட்டுப்போட வசதியாக, 2ம் நாளாக நேற்று, போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
அம்மாபேட்டை, நஞ்சம்பட்டி சந்திப்பில் வடக்கு துணை கமிஷனர் பிருந்தா தலைமையில் தொடங்கி, உடையாப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் முடிந்தது. இதில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார், தொழில் பாதுகாப்பு படையினர் பங்கேற்றனர்.

